""எங்களை கேவலப் படுத்திவிட்டார் பாரதிராஜா"": சரத், நெப்போலியன் கடும் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி போராட்டத்தின்போது இயக்குநர் பாரதிராஜா பேசியதற்கு திமுக நடிகர்களான சரத்குமார்,நெப்போலியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நெய்வேலியில் கருணாநிதியையும், ரஜினியையும் பாரதிராஜா கடுமையாகத் தாக்கிப் பேசினார். கருணாநிதிகுறித்து கேட்ட போது "யார் அவர்?" என்றும் கேட்டு நிருபர்களைக் கதிகலங்க வைத்தார் பாரதிராஜா.

ரஜினியை சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க இன்று வந்த சரத்குமார் நிருபர்களிடம் இது குறித்து பேசுகையில்,

நடிகர் சங்கத்தில் நடந்த ஆலோசனையின்போது நானும் போராட்டத்திற்கு வருகிறேன் என்று தான் ரஜினிகூறினார். ஆனால் சென்னையில் நடத்துவோம் என்றார். ஆனால் பாரதிராஜா மறுத்து விட்டார்.

நெய்வேலி கூட்டத்தில் யாருடைய பிரதிநிதியாகவோ பாரதிராஜா பேசினார். அங்கு அரசியலைப் புகுத்தியதேஇவர் தான். இவருக்கு தலைவர் ஆக வேண்டும் என்று ஆசை வந்தால் அங்கே போய்ச் சேர்ந்து விடவேண்டியதுதானே.

முதல்வர் பஸ் கொடுத்தார், எம்.ஏ.எம். ராமசாமி சாப்பாடு கொடுத்தார் என்று கூறி இதை ஒரு விளம்பரதாரர்நிகழ்ச்சியாக மாற்றி விட்டார் பாரதிராஜா. எங்களை எல்லாம் கேவலப்படுத்தி விட்டார் என்றார் சரத்குமார்ஆவேசமாக.

நெப்போலியன் கூறுகையில், கருணாநிதி குறித்து பேச பாரதிராஜாவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? யாருடையசார்பாக அல்லது எந்த இயக்கத்தின் பின்னணியில் இருந்து கொண்டு பாரதிராஜா இப்படிப் பேசுகிறார் என்றுதெரியவில்லை.

திடீரென்று 2 லட்சம் பேர் கூடி விட்டதால் தன்னை பெரிய ஆள் என்று எண்ணிக் கொண்டு விட்டாரா அல்லதுகூட்டம் கூட்டி பெரிய தலைவராக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதா என்று கேட்டார்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகாவும் பாரதிராஜாவைக் கடுமையாக விமர்சித்தார். அவர்நிருபர்களிடம் பேசுகையில்,

கடந்த 25 ஆண்டுகளாகவே எனக்கு பாரதிராஜாவைத் தெரியும். எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு பேசக் கூடியவர்.பின்னர் அதை நினைத்து நினைத்து வருந்துவார். இப்போதும் நெய்வேலியில் அப்படித் தான் உணர்ச்சி வசப்பட்டுபேசியுள்ளார்.

நெய்வேலி போராட்டத்தில் இலவசமாக பஸ் வழங்கினார்கள், இலவசமாக சாப்பாடு போட்டார்கள் என்றுகூறியதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பாரதிராஜா பணம் வாங்கியுள்ளார் என்பது வெளிப்படையாகவேதெரிகிறது என்றார் ராதிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+