இன்று விஜயதசமி: ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு
சென்னை:
விஜயதசமியையொட்டி இன்று தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தெய்வமாகிய சரஸ்வதியைப் போற்றும் விதத்தில் விஜயதசமிகொண்டாடப்படுகிறது.
இந்த விஜயதசமி திருநாளின் போது ஏராளமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும் பெற்றோரின் வழக்கம்.சரஸ்வதி பூஜையன்று பள்ளியில் சேர்ந்தால் தன் குழந்தை நன்றாகப் படிக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோரின்நம்பிக்கையும் கூட.
இதற்காக வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெறும் அட்மிஷன் போது கூட தங்களுடைய குழந்தைகளைப்பள்ளியில் சேர்க்காமல் விஜயதசமியின் போது தான் சில பெற்றோர்கள் சேர்த்து விடுவார்கள்.
அநேகமாக அனைத்துப் பள்ளிகளிலும் கூட விஜயதசமி தினத்தன்று புதிதாக குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அதன்படி விஜயதசமியான இன்று தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்தனர்.குழந்தைகளைப் பள்ளியில் சென்று சேர்ப்பதற்காகப் பெற்றோர்களும் பள்ளிகளில் வந்து குவிந்திருந்தனர்.
பல பள்ளிகளில் இன்று சிறப்பு அட்மிஷன் கூட நடைபெற்றது. இதற்காகப் பல நாட்களுக்கு முன்பிலிருந்தேஅந்தப் பள்ளிகள் விளம்பரம் செய்து வந்தன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications