சேலம்: லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கிகளுடன் திரிந்த 2 பேர் கைது
சேலம்:
உரிமம் இல்லாமல் துப்பாக்கிகள் வைத்திருந்த 2 பேரை சேலம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சீரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது வயலில்சந்தேகத்திற்கிடமான 2 பேர் கையில் துப்பாக்கிகளுடன் அலைந்து கொண்டிருந்தனர்.
சந்தேகமடைந்த பழனிச்சாமி அவர்களை விசாரித்தபோது, முயல் பிடிக்க வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.யாராவது தடுத்தால் சுட்டு விடுவோம் என்றும் அவர்கள் பழனிச்சாமியை மிரட்டினர்.
இதையடுத்து குரல் கொடுத்த பழனிச்சாமி ஊர் மக்களை திரட்டி வந்து இருவரையும் பிடிக்க முயன்றார்.
அப்போது தனபால் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார். அவரை போலீஸில் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.இன்னொரு நபர் தப்பி விட்டார். பின்னர் தனபால் கொடுத்த தகவலின் பேரில் சேகர் என்ற மற்றொரு நபரும்பிடிபட்டார்.
இருவரும் வைத்திருந்த துப்பாக்கிகள் உரிமம் இல்லாதவை என்றும் எதற்காக துப்பாக்கிகளுடன் வந்தார்கள்என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக சேலம் மாவட்டத்தில் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் துப்பாக்கிகளுடன்இருவர் பிடிபட்டுள்ளது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications