ரஜினியின் உணர்வு மிகப் பெரியது: கருணாநிதி
சென்னை:
தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு ரூ.1 கோடி ரூபாய் தருவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது மிகவும் சிறியதொகையாக இருந்தாலும், அவரது அறிவிப்பு மிகப் பெரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து 1970, 72ம் ஆண்டுகளில் அப்போதைய கர்நாடக முதல்வர் வீரேந்திரபாட்டீல், கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகியோருடன் நான் விவாதித்துள்ளேன்.
அப்போது நான் கூறிய கருத்து இப்போது மீண்டும் உயிர் பெற்றிருப்பது சந்தோஷம் தருகிறது.
தென்னிந்திய நதிகளை இணைப்பதற்காக ரூ.1 கோடி தருவதாக ரஜினி கூறியுள்ளார். அந்தத் திட்டத்திற்கு இந்தத்தொகை மிகவும் குறைவானது, போதாது என்றாலும் கூட அவரது உணர்வு மிகமிகப் பெரியது.
சுப்ரீம் கோர்ட், காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வருகிறது.எனவே பிரதமர் வாஜ்பாய் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தின் 256வது பிரிவைப்பயன்படுத்தி கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.
நெய்வேலி கூட்டத்தில் பாரதிராஜா கூறிய கருத்துக்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க கருணாநிதி மறுத்து விட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications