பெங்களூரில் தமிழ் சேனல்கள் "கட்": நீதிமன்றத்தில் போராட தமிழ் சங்கம் முடிவு
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர பெங்களூர் தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2 வாரங்களாகவே கர்நாடகம் முழுவதும் தமிழ் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுவிட்டது.இதன் மூலம் கர்நாடகத்தில் வாழும் சுமார் 1 கோடி தமிழர்களின் அடிப்படை உரிமையை கர்நாடகம்பறித்துள்ளது.
இலங்கையில் சிங்கள இன வெறியர்கள் செய்த கொடுமைகளை நினைவுபடுத்தும் விதத்தில் தமிழை ஒழிக்கும்முயற்சிகள் நடக்கின்றன. முதலில் தமிழர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை கட் செய்த கர்நாடகம் படிப்படியாகதமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது.
இதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இப்போது தமிழ் திரைப்படங்களும் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூர் தமிழ்ச் சங்கம் இந்த தமிழர் விரோத செயல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக முடிவுசெய்துள்ளது. "காவிரிச் சிக்கலின் விளைவு" என்ற தலைப்பில் சமீபத்தில் தமிழச் சங்கத்தில் முழு அளவிலானவிவாதம் நடந்தது.
அப்போது, காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு தமிழ்ச் சங்கம் ஆதரவளித்தும் கூட சில அரசியல்அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் சேர்ந்து கொண்டு தமிழர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன என்றுசங்கத்தின் தலைவர் க. சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
கர்நாடகத்தில் பிறந்து வாழும் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க முதல்வர்கிருஷ்ணா தவறிவிட்டார் என்றும் பெங்களூர் தமிழ்ச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழ் டி.வி. சேனல்களை உடனடியாக மீண்டும் தொடங்கவில்லைஎன்றால் கேபிள் இணைப்புகளைத் துண்டிப்பது, கேபிள் கட்டணத்தை கொடுக்காமல் நிறுத்துவது, இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழ்ச் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கர்நாடகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய போலீஸ் படையை அனுப்ப வேண்டும்என்றும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications