தலித்களை ஒடுக்கவே மத மாற்றத் தடை சட்டம்: ஆர்ச் பிஷப் குற்றச்சாட்டு
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டம் தலித்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக கொண்டு வரப்பட்டது என்று பாண்டிச்சேரி மற்றும்கடலூர் மண்டல டயாசிஸ்சின் ஆர்ச் பிஷப் டாக்டர் மைக்கேல் அகஸ்டின் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்தச் சட்டத்தை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இச் சட்டத்தை எதிர்த்துவரும் 19ம் தேதி அனைத்து மண்டல டயாசிஸ்சை சேர்ந்தவர்களும் மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதம் இருப்போம்.
24ம் தேதி அனைத்து கிருஸ்தவ கல்வி நிலையங்களும் மூடப்படும்.
இச் சட்டம் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட தலித்களை மேலும் ஒடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தலித்கள் கடுமையாகஎதிர்க்கிறார்கள். மேலும் அச் சட்டத்தை வைத்து சிறுபான்மையினரையும் ஒடுக்க அரசு நினைக்கிறது.
இச் சட்டத்தை அரசு நிச்சயம் தவறாகப் பயன்படுத்தும் என்றார் டாக்டர் மைக்ல்ே அகஸ்டின்.
மதுரையிலும்..
இதற்கிடையே மதுரையில் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பங்குத் தந்தை ஆண்டனி பாக்கியம்நிருபர்களிடம் கூறுகையில்,
ஒடுக்கப்பட்டுள்ள தலித்களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்ய எடுக்கப்படும் நல்ல முயற்சிகளை தடை செய்யவும், தலித்களுக்குநல் வாழ்கை தர முயல்பவர்களை மிரட்டவுமே இந்த மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
19ம் தேதி இந்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் நடக்கும் கண்டனப் பேரணியில் மார்க்சிஸ்ட் எம்.பி. மோகன், மதுரை மேயர்செ.ராமச்சந்திரன்,, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம் நாச்சியப்பன் உள்பட பலரும் கலந்து கொள்வர் என்றார்.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த பல தலைவர்களும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து இந்தச்சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினர்.
சட்டசபையில் விவாதம்:
இந் நிலையில் இந்த மதமாற்றத் தடுப்புச் சட்டம் குறித்து சட்டசபையில் விவாதிகப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் குறித்துசட்டசபை முதன்மைச் செயலர் சி.எஸ்.ஜானகிராமன் கூறுகையில்,
கோர்ட் கட்டண மாற்ற சட்டமசோதா, அரிசி மீதான விற்பனை வரி விதிப்பு சட்டம், நகராட்சி, மாநகராட்சி சிறப்புஅதிகாரிகளின் பதவி நீட்டிப்பு, கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு மசோதாக்கள்நிறைவேற்றப்படும் என்றார்.
இந்த சட்டசபைக் கூட்டத்தில் காவிரி விவகாரம் மிக முக்கிய இடம் பிடிக்கும் என்பது நிச்சயம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications