தமிழ் படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கர்நாடகம் நீக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை:
கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனே நீக்கினால் தான் இரு மாநிலங்களுக்கு இடையேசுமூக நிலை திரும்பும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடக அமைச்சர் திம்மப்பா கூறியிருக்கிறார். பிலிகுண்டு அணை க்கு நீர்விடப்பட்டதாக அவர் பேசியிருக்கிறார். கர்நாடகத்துக்குள் இருக்கும் பிலிகுண்டு அணையை வைத்து காவிரி நீர் தமிழகத்துக்குவருவதை கணக்கிட முடியாது.
இதை நாங்கள் ஆட்சியில் இருந்தபோதே காவிரி நடுவர் மன்றத்திடம் கூறிவிட்டோம். நடுவர் மன்றமும் மேட்டூர் அணைக்குவரும் நீரை வைத்துத் தான் கர்நாடகம் திறந்துவிட்ட நீரைக் கணக்கிட முடியும் என்று கூறிவிட்டது.
இதனால் மேட்டூர் அணையைத் தான் காவிரியில் கர்நாடகம் திறந்துவிடும் நீரை அளவிடும் அணையாக நடுவர் மன்றம்அறிவித்துள்ளது. ஆனால், தங்கள் மாநிலத்துக்குள்ளேயே இருக்கும் பிலிகுண்டு அணையை நீர் அளவிடும் அணையாககர்நாடகம் கூறி வருகிறது.
பிலிகுண்டு அணைக்குத் திறந்துவிடப்பட்ட நீர் எப்படி தமிழகத்துக்கு வந்த நீராகும்?. இந்த பிலிகுண்டு அணையை நாம் நீர்அளவிடும் அணையாக ஏற்றால் நமக்கு 25 டி.எம்.சி. நீர் வரை இழப்பு ஏற்படும்.
இதனால் இந்த பிலிகுண்டு அணைக்கு நீர் விட்ட வாதத்தை ஏற்க முடியாது. தமிழக அரசு இதை ஏற்கக் கூடாது.
அதே போல கர்நாடக திரைப்படத் துறையினர் தேவையில்லாமல் தமிழர்களுக்கு இடைஞ்சல் தருவதை நிறுத்த வேண்டும்.
நெய்வேலியில் போய் மின்சாரத்தை நிறுத்துவோம் என்று நடக்காத ஒரு காரியத்தை போராட்டமாக அறிவித்தது தமிழகதிரையுலகம். ஆனால், தமிழ்ப் படங்களைத் தடை செய்து தங்களால் முடிந்தததை கர்நாடக திரையுலகினர் செய்துவிட்டனர்.
தமிழ்ப் படங்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடையை கர்நாடகம் நீக்கினால் மட்டுமே இரு மாநிலங்களுக்கும் இடையிலானபதற்றத்தை ஓரளவுக்காவது குறைக்க முடியும்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications