டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு: ஜெ. பங்கேற்பு
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
மாநிலங்களின் நிதிநலை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய்கூட்டியுள்ளார். இக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் ஜெயலலிதா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று மாலை அவர் டெல்லிபுறப்பட்டுச் செல்கிறார். நாளை இரவே அவர் சென்னை திரும்புகிறார்.
நிதிச்சுமை மற்றும் பல்வேறு நிதிச் சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக ரூ.3,000 கோடி சிறப்பு நிதியை ஒதுக்குமாறுமத்திய அரசிடம், தமிழக அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை உடனடியாக தமிழகத்திற்குஅளிக்குமாறு நாளைய முதல்வர்கள் மாநாட்டில் வாஜ்பாயிடம் ஜெயலலிதா வலியுறுத்துவார்.
இதுபோல பல மாநில அரசுகளும் நிதியுதவி கோரியிருப்பதால் தான் முதல்வர்கள் மாநாட்டிற்கு பிரதமர் ஏற்பாடுசெய்துள்ளார்.
இம்மாநாடு முடிந்த பின்னர் வாஜ்பாயை தனியாக சந்திக்கவுள்ள ஜெயலலிதா, காவிரியில் தமிழகத்திற்கு நீர்திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.
நாளை நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கிருஷ்ணாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications