காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
ஸ்ரீநகர்:
இடைக்கால முதல்வராகப் பதவியில் நீடிக்க முடியாது என்று காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா கூறியதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையானஇடங்கள் கிடைக்கவில்லை. பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமே அதிகமாக 28 இடங்களைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் (22 இடங்கள்), மக்கள் ஜனநாயகக் கட்சியும் (16 இடங்கள்) வேறு சில இதரக்கட்சிகளுடனும் சுயேச்சைகளுடனும் இணைந்து ஆட்சி அமைக்க முன் வந்தன.
ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் காங்கிரசுக்கும் மக்கள் ஜனநாயக் கட்சிக்கும் இடையே போட்டாபோட்டி ஏற்பட்டது. அந்தக் குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.
இதற்கிடையே காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்கு வரும் 21ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்த அம்மாநிலஆளுநர் சக்ஸேனா, அதுவரை பாரூக் அப்துல்லாவை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் நேற்றுடன் பாரூக் அப்துல்லாவின் ஆறு ஆண்டு கால ஆட்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இடைக்காலமுதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
டெல்லியிலிருந்து பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவருக்கு போன் செய்து, 21ம் தேதி வரைமுதல்வராக நீடிக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அதற்குப் பலன் இல்லை. இடைக்காலமுதல்வராக நீடிப்பதில் தனக்கு விருப்பமே இல்லை என்று பாரூக் அப்துல்லா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு ஆளுநர்அறிவித்தார்.
ஆனாலும் ஆட்சி அமைக்க விரும்பும் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் முன் வந்து மெஜாரிட்டியை (44இடங்கள்) நிரூபித்து விட்டு காஷ்மீரில் ஆட்சியைத் தொடங்கலாம் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
-->
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications