5 அரியலூர் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த முடிவு
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கோவிந்தபுரம் என்ற கிராமத்தில் 5 ஆலயங்களுக்கு தமிழ் முறையில் குடமுழுக்கு விழாநடத்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவிந்தபுரம் கிராமத்தில் பழமையான விநாயகர், மாரியம்மன், முருகன் உள்ளிட்ட ஐந்து ஆலயங்கள் உள்ளன.
மிகவும் சிதிலமடைந்து, பாழடைந்த நிலையில் இருந்த இந்த ஐந்து ஆலயங்களையும் புணரமைத்து, குடழுக்குசெய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன.
நாளை குடழுக்கு விழா தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை தமிழில் குடமுழுக்கு நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த சைவ சிவாச்சாரியார் ஒருவர் இதை நடத்தி வைக்கவுள்ளார். இதற்கான அனைத்துஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.
சமீபத்தில் கரூர் அருகே உள்ள சிவன் கோவிலிலும் இதுபோலவே தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டதும், அதற்கு பிராமணர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்ததும், ஆனால் அதையும் மீறிதமிழிலேயே குடமுழுக்குசிறப்பாக நடந்ததும் தெரிந்ததே!
தமிழில் குடமுழுக்கு நடைபெற்றதை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் வரவேற்றிருந்த நிலையில் காஞ்சிசங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் உள்ளிட்ட சிலர் அதை எதிர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications