அதிருப்தி த.மா.கா. எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் தனி இடம்: காளிமுத்து
ஈரோடு:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டிருந்த குமாரதாஸ் உள்ளிட்ட 5எம்.எல்.ஏக்களும் தனி அணியாகச் செயல்படுவர் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமாகா அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதால், குமாரதாஸ் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்களும் சட்டசபையில்தனி அணியாக இருப்பார்கள். அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.
அதேசமயத்தில் பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் முருகவேல்ராஜன் மற்றும் சிவகாமி வின்சென்ட்டுக்கு தனிஇடம் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் இன்னும் பாமகவில்தான் இருக்கிறார்கள்.
வருகிற 24ம் தேதி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. ஒரு வாரத்திற்கு இக்கூட்டம் நடக்கும்.காவிரி நிதி நீர்ப் பிரச்சினை, கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் ஆகியவை குறித்து விவாதம் நடைபெறும்.
கருணாநிதி சட்டசபைக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்குமுழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும். அதனால் தனது கடமையை ஆற்ற அவர் முன்வர வேண்டும். பிரச்சினைஇருந்தால் என்னிடமும் கூறலாம் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications