பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதற்கான உத்தரவை அரசுபிறப்பித்துள்ளது.
கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளும் சம்பந்தப்பட்டபல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாக அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சென்னைப் பல்கலைக்கழகத்துடன், இந்தப் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரிகளை இணைக்கபல்கலைக்கழக சட்டத்தில் இடம் இல்லை.
எனவே இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சட்டத்தில் திருத்தம் செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், சென்னையில் உள்ள அரசுக் கல்லூரிகளும் சென்னைபல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்படுவதை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் கடந்த 8ம்தேதியிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டத்திற்கு கல்லூரி மாணவர்களும், அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாதஊழியர்களும் ஆதரவு தெரிவித்துப் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications