""பொடாவுக்கு பயப்படுகிறார் ராமதாஸ்"": கிருஷ்ணசாமி
கோயம்புத்தூர்:
பொடா சட்டத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தின் காரணமாக மீண்டும் எப்படியும் அதிமுகவுடன்கூட்டணி வைத்துக் கொள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் துடித்துக் கொண்டிருக்கிறார் என்று புதிய தமிழகம் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
கோயம்புத்தூரில் இன்று நிருபர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
இவ்வளவு நாட்களும் விடுதலைப்புலிகளை முழுமையாக ஆதரித்து வந்தவர் ராமதாஸ் என்பது அனைவருக்கும்தெரியும். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அவர் கூறியதையும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
ஆனால் இந்தக் காரணங்களால் அவரைப் பொடா சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு தயங்காது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியதைத் தொடர்ந்து ராமதாஸின் போக்கே மாறிவிட்டது.
பொடா சட்டத்திற்குப் பயந்து அதிமுகவிடமே மீண்டும் சரணடைவதற்கு ராமதாஸ் தயாராகி விட்டார்.
அதற்காகத் தான் தேவையே இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த்தைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசி வருகிறார்.அவருடைய ரசிகர்களிடையே குழப்பத்தைத் தூண்டிவிட்டு வன்முறையைத் தூண்டவும் ராமதாஸ் முயற்சிக்கிறார்என்றார் கிருஷ்ணசாமி.
நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைப்பது இனிமேல் நடக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளது பற்றிநிருபர்கள் கேட்ட போது, அவரும் சில நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் நடிக்க முயற்சித்தவர் தானே என்றுபதிலளித்தார் கிருஷ்ணசாமி.கடந்த 13ம் தேதி சென்னையில் ரஜினி உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு அருகே உட்கார்ந்து கொண்டுகிருஷ்ணசாமியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications