மாறன் தொடர்ந்து சீரியஸ்: மருத்துவமனையில் கருணாநிதி
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.அவருடைய மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றுஅவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தார்.
கடந்த ஜூலை மாதம் மாறனுக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டு, செயற்கை இருதய வால்வுபொருத்தப்பட்டது.
அந்த வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடைய உடல் நிலை கடந்த மாதம் மிகவும்பாதிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு அறுவைச் சிகிச்சை மூலம் வேறு ஒரு புதிய இருதய வால்வு அவருடையஇருதயத்தில் பொருத்தப்பட்டது.
இருந்தாலும் பூஞ்சைத் தொற்று அவருடைய ரத்தத்தில் கலந்து விட்டதால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்ஆகியவை பாதிக்கப்பட்டன. இதையடுத்து மாறனுக்கு பல்வேறு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு மருத்துவர்களும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனை கூறி வருகின்றனர்.
நேற்று கூட ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மாறனுக்குஇந்த மருந்து செலுத்தப்படும். பூஞ்சைத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் இந்த ஊசி மருந்துஅமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள பூஞ்சைத் தொற்றை சரிப்படுத்திய பிறகு தான் மாறனின் கல்லீரல்,சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை நன்றாக வேலை செய்யும்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்ருகன் சின்ஹா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்குநேரடியாக வந்து மாறனின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும்விசாரித்தார்.
பின்னர் நிருபர்களிடம் சின்ஹா பேசுகையில், மாறனுக்கு எந்தவிதமான மருத்துவ உதவியையும் அளிக்க மத்தியஅரசு தயாராக உள்ளது. அவசியம் ஏற்பட்டால் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுசெய்யப்படும். விரைவில் அவர் உடல்நிலை சரியாகும் என்று நம்புகிறோம் என்றார்.
சின்ஹா அங்கு வந்த போது கருணாநிதியும் அப்பல்லோவில் தான் இருந்தார். சின்ஹாவுடன் சுகாதாரத்துறைஇயக்குநர் அகர்வாலும் வந்திருந்தார்.












Click it and Unblock the Notifications