மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் பேரணி
சென்னை:
தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் அதை உடனடியாக வாபஸ் பெறக் கோரியும் மாநிலம்முழுவதும் சிறுபான்மை மதத்தினர் போராட்டம் நடத்தினர்.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க அச்சட்டம்வழி செய்கிறது.
இந்தத் தடைச் சட்டத்திற்கு சிறுபான்மை கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள்மதங்களுக்கு எதிராக, குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் இன்று மதமாற்றத் தடைச் சட்டத்தைஎதிர்த்து பேரணி மற்றும் போராட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தினர்.
சென்னையில் "நடுவண் தொடரூர்தி நிலையம்ங (சென்ட்ரல் ரயில் நிலையம்) அருகே ஆர்க் பிஷப் எர்றா சண்முகம்மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமையில்பேரணி நடைபெற்றது.
தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் அதை வாபஸ் பெறக் கோரியும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
பேரணியின் முடிவில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நிருபர்களிடம் எர்றா சண்முகமும் ஹைதர் அலியும்பேசுகையில்,
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கும் இப்போராட்டம் எங்களுடைய முதற்கட்ட நடவடிக்கை தான்.
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து அன்றையதினமே நாங்கள் மாநிலம் முழுவதும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். மேலும்நாங்கள் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளும் அன்று மூடப்பட்டிருக்கும் என்று அவர்கள் கூறினர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே போல் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. திருச்சியில்திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களும் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களும் கொண்ட சுமார் 3,000பேர் அம்மாநகர மேயர் சாருபாலா தொண்டமானுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பாண்டிச்சேரியிலும் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்நடத்தினார்கள்.
இதற்கிடையே புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம்பேசுகையில், மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைச் சட்டம் கொண்டு தடுக்க முடியாது. வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தச்சட்டத்தை எதிர்த்து சென்னையில எங்கள் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications