சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா
சென்னை:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரையும்இந்தியா கைப்பற்றி விட்டது.
மேலும் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைஇந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணியினர் ஒரு இன்னிங்ஸ் மற்றம்117 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரைத் தோற்கடித்தனர்.
அதே உற்சாகத்துடன் கடந்த 17ம் தேதியும் சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
மேற்கு இந்தியத் தீவுகள் டாஸை வென்ற போதிலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அனில்கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் "சுழல்களுக்கு" அந்நாட்டு அணியினர் மளமளவென்று வீழ்ந்தனர்.
ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மட்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமாகத் துவங்கச் செய்தது. ஆனாலும்சென்னை ரசிகர்களும் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை அளித்துக் கொண்டே இருந்தனர்.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 229ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்களை எடுத்திருந்ததால், 81 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன்இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
துவக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர ஷேவாக்கும் சஞ்சய் பங்க்கரும் சேர்ந்தே இந்த ரன்களை அடித்துக் குவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தான் இந்த டெஸ்ட் வெற்றியை இந்தியா பெறவேண்டியிருந்தது. ஆட்டத்தின் முடிவில் சச்சின் டெண்டுல்கர் 16 ரன்களும், ராகுல் டிராவிட் 6 ரன்களும் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நான்காவது நாளிலேயே இந்த டெஸ்ட் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீ"ழ்த்தியஹர்பஜன் சிங், சென்னை டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் வரும் 30ம்தேதி கல்கத்தாவில் தொடங்குகிறது.
-->
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications