தமாகாவில் தான் தொடர்ந்து நீடிப்போம்: அதிருப்தி எம்.எல்.ஏ.
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைய மாட்டோம் என்றும்மதுரை மத்திய தொகுதி தமாகா எம்.எல்.ஏவான எம்.ஏ. ஹக்கீம் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தேர்தல் கமிஷன் சமீபத்தில் முடக்கியது. இதையடுத்து கட்சியின் கொடி, சின்னம்,பெயர் போன்றவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் கூறியிருந்தார்.
ஆனால் காங்கிரஸுடன் சேராமல் தனித்து செயல்படும் 5 தமாகா எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து தமாகா என்றபெயரிலேயே இயங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மதுரையில் ஹக்கீம் கூறுகையில்,
காங்கிரஸுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது என்றுகாங்கிரஸார் கூற முடியாது.
தொடர்ந்து நாங்கள் தமாகா என்ற பெயரிலேயே செயல்படுவோம். எங்களுக்கு சட்டசபையில் தனி இடம் ஒதுக்கக்கோரி சபாநாயகர் காளிமுத்துவிடம் மனு கொடுக்கவுள்ளோம் என்றார் ஹக்கீம்.
இந்த ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் எந்தக் கட்சியையும் சேராதவர்கள் என்றும் அவர்களுக்கு சட்டசபையில்தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் சமீபத்தில் காளிமுத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications