58 வயது... 58 தேங்காய்கள்... 90 நிமிடங்கள்...

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணத்தில் 58 வயதாகும் அரசு ஊழியர் ஒருவர் 90 நிமிடங்களில் தனது பல்லால் 58 தேங்காய்களை உரித்துசாதனை படைத்துள்ளார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமையன். இவருக்கு 58வயதாகிறது. விரைவில் ஓய்வுப் பெறப் போகிறார்.

ஏதாவது சாதனை செய்து விட்டு மக்கள் மனதில் இடம் பெற்று விட்டு ஓய்வு பெறும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து தன்னுடைய பற்களைக் கொண்டே தேங்காய்களை உரிக்க முடிவு செய்தார்.

இதையடுத்து கும்பகோணம் காவேரி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு 58 தேங்காய்களுடன்வந்தார்.

பின்னர் தனது பற்களால் தேங்காய்களை உரிக்கத் தொடங்கினார். அடுத்த 90 நிமிடங்களில் 58 தேங்காய்களையும்உரித்துத் தள்ளினார்.

கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாகக் குரல் எழுப்ப பின்னர் ராமையன் உரிக்கப்பட்ட தேங்காய்களை எடுத்துசிதறு தேங்காய் விட்டார்.

""இப்போது மன நிறைவுடன் ஓய்வு பெறுவேன்"" என்று பெருமிதத்துடன் பற்களை லேசாகக் கடித்துக் கொண்டேகூறினார் ராமையன்.

கரும்பைக் கடித்தாலே பலருக்கு பல் பறிபோகும் இந்தக் காலத்தில், 58 தேங்காய்களை பல்லிலேயே உரித்துத்தள்ளி 58 வயது ராமையனை அந்தப் பகுதி மக்கள் டைனோசரைப் பார்ப்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அவருடைய சாதனையை வெகுவாகப் பாராட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+