தொடர்ந்து அபாய கட்டத்தில் முரசொலி மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மாறனின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொடுக்கப்பட்டு வந்த அதி நிவீனஊசி மருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.
தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்தவ அறிவியல் கழக நெஞ்சகத்துறை தலைமை மருத்துவர் டாக்டர்பாண்டேவின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
டாக்டர் பாண்டேவும் நேற்று இரவே சென்னை வந்து சேர்ந்தார். அவர் தற்போது மாறனுக்கு தீவிர சிகிச்சைஅளித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications