""பின் லேடனே பிடிபடலை, வீரப்பனை எங்கே பிடிப்பது?""- கிருஷ்ணா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனை அமெரிக்காவாலேயே பிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி வீரப்பனைப் பிடிக்க முடியும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மிகவும் ஆதங்கத்துடன்பேசினார்.

பெங்களூரில் இன்று ஒரு விழாவில் கலந்து கொண்டு கிருஷ்ணா பேசுகையில்,

சமீபத்தில் நான் டெல்லி சென்றிருந்த போது வீரப்பனை ஏன் இன்னும் பிடிக்க முடியவில்லை என்று சிலர்கேட்டனர்.

ஆனானப்பட்ட அமெரிக்காவாலேயே பின் லேடனைப் பிடிக்க முடியவில்லை. நாங்கள் எப்படி வீரப்பனைப்பிடிக்க முடியும்?

கடந்த 22 ஆண்டுகளாக சுமார் 18,000 சதுர மைல்கள் கொண்ட காட்டுப் பகுதிகளில் வீரப்பன் வாழ்ந்து வருகிறான்.காட்டில் உள்ள அனைத்து இடங்களும் அவனுக்கு அத்துப்படி.

நினைத்தவுடன் உடனடியாகப் போய் வீரப்பனைப் பிடிப்பதற்கு அந்தக் காடுகளுக்குள் என்ன தேசியநெடுஞ்சாலையா போட்டிருக்கிறோம்?

அவனைப் பிடிப்பதற்காகச் செல்லும் அதிரடிப்படை போலீசார் கூட 20 அல்லது 30 பேராக கூட்டம் கூட்டமாகத்தான் காட்டுக்குள் போக வேண்டியுள்ளது.

கடந்த முறை வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டதற்காக அவனுக்கு ஏராளமான பணத்தைகர்நாடக அரசு கொடுத்தள்ளதாக சிலர் குற்றம் சாட்டினர்.

அந்தப் பணம் என்ன எங்க மாமா வீட்டிலேயா குவிந்து கிடந்தது, உடனே எடுத்துக் கொண்டு போய் வீரப்பனிடம்கொடுக்க? அல்லது இதைப் பற்றியெல்லாம் ஆடிட்டிங் போது அக்கவுண்டண்ட் ஜெனரால் கேட்காமல் இருந்துவிடுவாரா?

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட பின்னர் கர்நாடகத்தில் உள்ள எந்த ஒரு தமிழனுக்கும்பாதிப்பு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு நாங்களும் தமிழர்களும் அண்ணன்-தம்பி போலத் தான் பழகிவருகிறோம் என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் கிருஷ்ணா.

"வீரப்பனிடமிருந்து பதில் இல்லை":

இதற்கிடையே வீரப்பனிடம் யார் தூது செல்வது என்பது பற்றி அவனிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லைஎன்று கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும்கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமி ஆகியோரைத் தூதர்களாக அனுப்பவேண்டும் என்று வீரப்பன் தான் அனுப்பிய கேசட்டில் கேட்டிருந்தான்.

ஆனால் கொளத்தூர் மணியைத் தூதாக அனுப்புவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து மகாதேவசாமியைவைத்தே வானொலி மூலம் வீரப்பனுக்கு கர்நாடக அரசு தகவல் அனுப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து கார்கேயிடம் இன்று நிருபர்கள் கேட்ட போது அவர் கூறுகையில்,

இன்னும் வீரப்பனிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. விரைவில் அவன் கேசட் அனுப்புவான் என்றுநினைக்கிறோம். அதற்காகவே நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு நாளை தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவருக்கு ஜாமீன்கிடைத்த பிறகே அவரைக் காட்டுக்குள் தூதராக அனுப்பலாமா என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம்என்றார் கார்கே.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+