பஸ், ரேஷன் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் ரேஷன் ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ்வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்ற அறிவித்துள்ளார்.
எப்போதும் வழங்கப்படும் 20 சதவீத போனசை வழங்க வேண்டும் என்று கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள்கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் நடத்திய காலவரையற்ற போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.சிறை நிரப்பும் போராட்டத்திலும் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையைசிறைகளில் தான் "கொண்டாடினர்".
சுமார் 16 நாட்களுக்கு தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்களைக் கொண்டே தமிழக அரசு போக்குவரத்தை சீர்செய்தது. போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படாது என்றும் 8.33 சதவீத போனஸ்தான் வழங்கப்படும் என்பதிலும் அரசு உறுதியாக இருந்தது.
கடைசியில் அரசு அளித்த 8.33 சதவீத போனஸ் தொகையையே பெற்றுக் கொண்டு போராட்டத்தை வாபஸ்பெற்றனர் போக்குவரத்துக்கழக ஊழியர்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டும் அவர்களுக்கு 8.33 சதவீத ானசை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்துக்கழக மற்றும் ரேஷன் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்றுதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications