Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் டி.ஏ. உயர்வு: நாளை ஸ்டிரைக்கும் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப் படி 4 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும் வேறு பலகோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இதுவரை 45 சதவீதமாக இருந்த அகவிலைப் படி 49 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

கடந்த 1ம் தேதி முதல் இந்த அகவிலைப் படி உயர்வு அமலுக்கு வருகிறது. இதில் 3 சதவீதம் உடனடியாகரொக்கமாக வழங்கப்படுகிறது.

எஞ்சிய ஒரு சதவீத அகவிலைப் படி அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேர்க்கப்படும்.

அரசின் நிதி நிலைமை சீரான பின்னர் இந்த ஒரு சதவீதத் தொகையை வருங்கால வைப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

அகவிலைப் படி உயர்வால் 12.42 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதையடுத்து அவர்களுடையமாதச் சம்பளம் ரூ.102 முதல் ரூ.876 வரை அதிகரிக்கும்.

இந்த அகவிலைப் படி உயர்வால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.267.08 கோடி வரை செலவாகும். இந்த ஆண்டுமட்டும் ரூ.133.54 கோடி கூடுதல் செலவாகும்.

அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களில்பணிபுரிபவர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த அகவிலைப் படிஉயர்வு பொருந்தும்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் கூட இந்த அகவிலைப் படி உயர்வு பொருந்தும். இதன் மூலம் அவர்களுக்குஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ரூ.51ம் அதிகபட்சம் ரூ.438ம் ஓய்வூதியத்தில் கூடுதலாகக் கிடைக்கும் என்றுஅந்தச் செய்திக் குறிப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கிடையே தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்றவேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாத தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றித் தலைவரான சூரியமூர்த்தி, தமிழ்நாடுஅரசு அலுவலர் கழகத் தலைவர் பத்மநாபன், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர் சங்கத் தலைவர் ஆர்.பத்மநாபன் ஆகியோரை மட்டும் ஜெயலலிதா நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுக்குப் பின்னரே அகவிலைப் படி உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுஊழியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக்கை தடுத்து நிறுத்தலாம் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டார்.

ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜேக்டோ-ஜியோ நாளைதிட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

பொங்கல் போனஸ், சரண் விடுப்பு வழங்க வேண்டும், வேலைநிறுத்தத் தடைச் சட்டம், அரசுத்துறையில் ஆள்குறைப்பு ஆகியவற்றைக் கைவிட வேண்டும், சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்ஆகியவை உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நாளை போராட்டத்தைத் தொடங்குகின்றனர்.

நூற்றுக்கும் மேலான அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+