16,000 திமுக தொண்டர்கள் இன்னும் சிறையில்...
சென்னை:
திமுக இளைஞரணி சார்பாக நடந்த போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்ட சுமார் 16,000 திமுக தொண்டர்களைப் போலீசார் இன்னும் விடுதலை செய்யவில்லை என்றுஅக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில்போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அதன் செயலாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள்நடத்தப்பட்டன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஸ்டாலின் உள்ளிட்ட 27,000 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாகப்போலீசார் கூறினர். ஆனால் 64,000 தொண்டர்கள் வரை கைது செய்யப்பட்டதாக திமுக தரப்பு தெரிவித்தது.
இருப்பினும் ஸ்டாலின் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவருமே நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்திற்கு முந்தைய நாளிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 16,000 திமுகதொண்டர்களைப் போலீசார் கைது செய்ததாகவும் அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை என்றும் திமுக இன்றுகுற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இன்று திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
போராட்டம் நடத்திய திமுக தொண்டர்களைப் போலீசார் விடுதலை செய்து விட்டனர்.
ஆனாலும் போராட்டத்திலேயே கலந்து கொள்ளாத, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டசுமார் 16,000 தொண்டர்களைப் போலீசார் இன்னும் விடுவிக்கவில்லை.
அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்சித் தலைமைவிரைவில் கூடி அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications