மாறன் தொடர்ந்து சீரியஸ்: காங். தலைவர்கள் உடல் நலம் விசாரித்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும்ஏற்படவில்லை.

சென்னை-அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், மாறனின்உடல்நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அவர் உடல் நிலை இன்னும் தொடர்ந்து சீரியஸாகத் தான் உள்ளது என்றும் அவர்கள்தெரிவித்தனர்.

இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் இன்று மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள் மூவரும் மாறனின் மனைவி மல்லிகாவைச்சந்தித்து, மாறனின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பாக தாங்கள் வந்துள்ளதாகவும் மாறன் விரைவில்குணமடைய சோனியா பிரார்த்தனை செய்வதாகவும் மல்லிகாவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+