மாறன் உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்தார் கலாம்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்தொலைபேசி மூலம் விசாரித்தார்.
மாறனின் இருதயத்தில் பொருத்தப்பட்ட செயற்கை வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வேறுஒரு புதிய செயற்கை வால்வு பொருத்தப்பட்டது.
இருந்தாலும் அந்தப் பூஞ்சைத் தொற்று அவருடைய ரத்தத்திலும் கலந்து விட்டதால் மாறனின் நுரையீரல், கல்லீரல்மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டன.
இதனால் அவர் உயிருக்குப் போராடி வருகிறார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் மாறனைக் காப்பற்றதொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த இருதய நோய் நிபுணரான டாக்டர்பாண்டேயும் நேற்று சென்னை வந்து மாறனுக்குச் சிகிச்சை அளித்தார்.
இந்நிலையில் மாறனின் மனைவியான மல்லிகா மாறனிடம் தொலைபேசி மூலம் டாக்டர் கலாம் தொடர்பு கொண்டு,அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மேலும் மாறன் விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் மல்லிகாவிடம் டாக்டர் கலாம் கூறினார்.
இதற்கிடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் தொலைபேசி மூலம் திமுக தலைவரும்மாறனின் மாமாவுமான கருணாநிதியைத் தொடர்பு கொண்டு, மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் கருணாநிதி நேற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மாறனின் உடல்நிலை குறித்துமருத்துவர்களிடம் விசாரித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications