வங்கக் கடலில் புயல் சின்னம்
சென்னை:
வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 2நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியிலும், ஆந்திராவின் தெற்கிலும் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா அல்லது வடக்கு தமிழகத்தில் கரையைக்கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் முழுவதிலும் மிக பலத்த மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரளவுபலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையும் முழு வீச்சில் தொடங்கி விடும் என்று தெரிகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications