மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கொண்டு வந்தது.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ.50,000வரை அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி தொடங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஆளும் அதிமுக மற்றும் பா.ஜ.கவைத் தவிர பெரும்பாலான கட்சிகளும், சிறுபான்மை மத அமைப்புகளும் இந்தச்சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதால் இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை மதத்தினர் 24ம் தேதி பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளனர்.சிறுபான்மையினர் தாங்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களையும் அன்றைய தினம் மூடவுள்ளனர்.
இந்நிலையில் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்குதொடரப்பட்டுள்ளது.
திருத்தணியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தைசெல்லாது என்று அறிவிக்கக் கோரி அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கராஜின் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications