ஸ்டாலின் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி கைதான திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க. ஸ்டாலின்உள்ளிட்ட அனைத்து திமுக தொண்டர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், கட்டணம் மற்றும் விலை உயர்வு, கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

ஸ்டாலினுக்கு தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்தப்போராட்டத்தை இளைஞரணியைக் கொண்டு நடத்தச் செய்தது திமுக. அதன் மூலம் அவரை கட்சியின் அடுத்ததலைவராக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.

எதிர்பார்த்த அளவுக்கு தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை வீசியது. நேற்றைய போராட்டத்தின் போது சுமார்27,000 திமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திமுகவைச் சேர்ந்தஎம்.பிக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் அடக்கம்.

சில திமுக எம்.எல்.ஏக்களும் நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகியதாக செய்திகள் வந்தன.

ஆனால் அவர்கள் ஒருவேளை கைது செய்யப்பட்டு 15 நாட்கள் வரை சிறை செல்ல வேண்டி வந்தால், வரும் 24ம்தேதி தொடங்கும் சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அவர்களால் கலந்து கொள்ள முடியாதே என்றுநினைத்தது திமுக தலைமை.

இதனால் நேற்றைய போராட்டத்தில் ஸ்டாலினைத் தவிர திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

சென்னையில் ஸ்டாலின் உள்பட 5,000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்அனைவரும் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர்.

நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆனால் காலை 11 மணிக்கெல்லாம்ஓடிக் கொண்டிருந்த பஸ்களில் "அறவழியில் போராடிய ஸ்டாலினைக் கைது செய்த தமிழக அரசே, அவரைஉடனே விடுதலை செய்" என்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதைப் பார்த்த போலீசார் "யப்பா... திமுக தொண்டர்கள் ரொம்பவும் தான் ஃபாஸ்ட்டா இருக்காங்களே" என்றுகமெண்ட் அடித்தனர்.

பின்னர் ஸ்டாலின் உள்பட தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட அனைத்து திமுக தொண்டர்களும் நேற்றுமாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+