ஹைதராபாத் பட்டாசு கடையில் தீ: தமிழர்களும் பலி
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் இன்று அதிகாலை ஒரு பட்டாசுக் கடையில் தீப்பிடித்துக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் சிலதமிழர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தின் பேகம் பஜார் பகுதியில் ஒரு நான்கு மாடிக் கட்டடம் உள்ளது. கீழ்த் தளத்தில் ஒரு பட்டாசுக்கடையும், முதல் மாடியில் கனரா வங்கியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் ஒரு லாட்ஜும் இருந்தன.
இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பட்டாசுக் கடையில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. இந்தத் தீமளமளவென்று பரவியதால் கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
பின்னர் அந்தக் கட்டடத்தின் நான்கு மாடிகளுக்கும் தீ பரவியது. இதனால் லாட்ஜில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்தீக்குள் மாட்டிக் கொண்டனர்.
தீயின் தாக்கத்திலும், புகை மூட்டத்திலும் சிக்கிக் கொண்ட அவர்களால் வெளியே வர முடியவில்லை. புகை மூட்டம்காரணமாக அவர்களுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
இவ்விபத்தில் 13 பேர் தீக்காயங்களுடனும், மூச்சுத் திணறியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் சிலர் தமிழகம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்ள் என்று தெரிய வந்துள்ளது.இவர்கள் தொழில் சம்பந்தமாக ஹைதராபாத் வந்து இந்த லாட்ஜில் தங்கியிருந்தனர்.
மேலும் இறந்தவர்களில் 9 பேர் லாட்ஜில் வேலை பார்த்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 18 பேர் ஓஸ்மேனியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 13பேர் சிகிச்சை பெற்று உடனடியாகத் திரும்பிவிட்டனர்.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும் ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு உடனடியாக அங்கு சென்று மீட்புநடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார். பட்டாசுக் கடையின் உரிமையாளரைக் கைது செய்யவும்உத்தரவிட்டார்.
பின்னர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார். விபத்து குறித்துஹைதராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications