மத மாற்றத்துக்கு தீண்டாமைக் கொடுமை தான் காரணம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சி மடாதிபதியின் நெருக்குதலால் தான் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தச் சட்டத்தைக்கொண்டு வருமாறு மத்திய அரசையும் அவர் நிர்பந்தித்து வருகிறார். ஆனால், அதை நிறைவேற்ற விட மாட்டோம்என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை எதிர்த்து நேற்று சென்னை ஆண்ட்ரூ சர்ச் வளாகத்தில் ஆயிரக்கணக்கானகிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு, புதிய தமிழகம் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக் கூட்டத்தில் கருணாநிதி கூறியதாவது:

இந்து என்பவன் யார்? பெரியாரிடம் கேட்டால் சரியாக விளக்கம் அளிப்பார். ஆனால், இந்துக்கள் என்றால்திருடர்கள் என்று யாரோ சொன்னதாகக் சொல்கிறார்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. என்னைப்பொறுத்தவரை இந்து என்றால் இதயத்தை திருடியவன் என்று பொருள் கொள்ளவே விரும்புகிறேன்.

தலித்துகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்யவும், அவர்களது குறைகளைத் தீர்க்கவும் அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் அவர்கள் மதம் மாறுகிறார்கள். அதை விடுத்து மதம்மாறுவதை மட்டும் தடுப்பது என்ன நியாயம்?

மதமாற்றத்தால் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இது தொடர்பானஆதாரம் எங்கும் இல்லை. உண்மையில் 2.6 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 1981ல் 2.43சதவீதமாக ஆகக் குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் 2.34 சதவீதமாககக் குறைந்து, கடைசியாக 2001ல்எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வெறும் 2.18 சதவீதமாகத் தான் உள்ளது.

தலித்துக்கள் ஏன் இன்னும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இன்னும் ஏன் இரட்டை டம்பளர் முறை அமலில்உள்ளது? குவளையில் நீர் தர மறுக்கிறீர்கள். மூங்கில் குழாயில் நீரை ஊற்றித் தருகிறீர்கள். தலித்தின் நிலை இதுவாகஇருந்தால் அவன் மதம் மாறாமல் என்ன செய்வான்?

தொழுநோயாளிகளும், இந்துக்கள் அல்லாதவர்களும் உள்ளே நுழையக் கூடாது என்று கோவில்களில்அறிவிப்புகள் ஏன் வைக்கப்பட்டுள்ளன? சுயமரியாதை உள்ளவன் இதைப் பார்த்துக் கொண்டிருப்பானா?அதனால் மதம் மாறுகிறான். மத மாற்றத்துக்குக் காரணமே மன மாற்றம் தான்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி மத்தியிலும் இதுபோன்ற சட்டம் கொண்டு வர முயற்சி நடக்கிறது.ஆனால் நாங்கள் அதை விட மாட்டோம். அனுமதிக்க மாட்டோம். கருணாநிதி இருக்கும் இடத்தில் மதவாதம்நுழையாது என்றார் சி.சுப்பிரமணியம். அவர் கூறியதைப் போல சாகும் வரையில் கருணாநிதி இந்தச் சொல்லைக்காப்பாற்றுவான் என்றார் கருணாநிதி.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கைவிடாவிட்டால்தமிழகத்திலுள்ள 2 கோடி தலித்துகளும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+