கிருஷ்ணா முதல்வராக நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கிருஷ்ணா கர்நாடக முதல்வர் பதவி வகிப்பதை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.டி. ராஜதேவன் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை மதிக்கவில்லை. கர்நாடக முதல்வரும் அமைச்சர்களும் இவற்றைமீறியுள்ளனர்.
அரசியல் சட்டம் 164 (3) என்ற பிரிவின் கீழ் ஒவ்வொரு அமைச்சரும் பதவி ஏற்கும் போது உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அந்த உறுதிமொழியின் படி தற்போது நடந்து கொள்ள மறுக்கிறார்கள்.
எனவே கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக அமைச்சரவையில் உள்ள அனைவருமே பதவியில் தொடர தகுதிஇல்லாதவர்கள்.
எந்தத் தகுதியின் அடிப்படையில் அவர்கள் இன்னும் பதவிகளில் தொடர்ந்து உள்ளனர் என்பதை நீதிமன்றம்கேள்வி எழுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் தகுந்த தீர்ப்பையும் வழங்க வேண்டும் என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications