சென்னையில் போலி டெலிபோன் எக்சேஞ்ச்: 7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி டெலிபோன் இணைப்பகம் நடத்தி மத்திய அரசுக்கு ரூ.3.5 கோடி நஷ்டம் ஏற்படுத்திய 7 பேர் கொண்டகும்பலை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் கோபால் பிள்ளை. இவரும் ரமேஷ், சிவா, கண்ணன், பாலகிருஷ்ணன், வேலன்,ஹரிஹரன் ஆகிய மற்ற ஆறு பேரும் சேர்ந்து இந்த மோசடியைச் செய்துள்ளனர்.

இதில் கோபால் பிள்ளை என்பவருக்கு பல வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளன. அதைக் குறுக்கு வழியில்பயன்படுத்தி சம்பாதிக்க அவர் திட்டமிட்டார்.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., வி.எஸ்.என்.எல். ஆகிய அரசு நிறுவனங்களின் ஐ.எஸ்.டி.என். வசதியைமுறைகேடாக பயன்படுத்தினார். அந்த வசதியைப் பயன்படுத்தி ரகசியமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தையேஏற்படுத்தினார்.

சென்னையில் பல இடங்களில் இந்த ரகசிய இணைப்பகங்கள் இயங்கினன. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். மற்றும்வி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு கடந்த ஆறு மாதங்களில் மூன்றறை கோடி ரூபாய் வரை இழப்புஏற்பட்டுள்ளது.

இந்தக் கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். கோபால் பிள்ளையின் தம்பி கனடாவில் உள்ளார்.ரகசிய தொலைபேசி இணைப்பகத்திற்கான மாஸ்டர் பிரைனே அவர் தான்.

அவரை கைது செய்ய சர்வதேச போலீஸான இன்டர்போலின் உதவியை சென்னை போலீஸார் நாடியுள்ளனர்.

கைதான கும்பலிடமிருந்து ஏராளமான கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், பல்வேறுகம்ப்யூட்டர் போர்டுகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+