பாண்டிச்சேரி மாஜி முதல்வர் மீதான லஞ்ச வழக்கில் இன்று தீர்ப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தமாகா எம்.எல்.ஏ கந்தசாமிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக முன்னாள் முதல்வர்வைத்திலிங்கம், சபாநாயகர் டி.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்புவழங்கப்படுகிறது.
கடந்த 1997ம் ஆண்டு கந்தசாமி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னைக் காங்கிரஸில் சேருமாறு கூறிவைத்தியலிங்கமும், ராமச்சந்திரனும் வற்புறுத்தி ரூ.9 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறினார்.பாண்டிச்சேரியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது இந்தப் புகார்.
லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தையும் அவர் போலீஸில் ஒப்படைத்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குதொடர்ந்தது.
இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வைத்தியலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் தவிரஅதிமுக மாநில செயலாளர் நடராஜனும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பை பாண்டிச்சேரி மக்கள் மிகவும் ஆவலுடன்எதிர்பார்த்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications