பாக். பயங்கரவாதிகளை ஒழிப்போம்: வாஜ்பாய் சூளுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் ஆனால் பயங்கரவாதத்தைஒழித்துக்கட்ட இந்தியாவால் முடியும் என்றும் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கட்சி பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில்டெல்லியில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியின் போது வாஜ்பாய் உரையாற்றுகையில்,

இந்தியாவில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்காக தற்கொலைப் படைகளைக் கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல்அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அவ்வாறு அனுப்பி ஈவு, இரக்கமே இல்லாமல் அப்பாவிப் பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும்கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் பாகிஸ்தான் தற்போது முழு பயங்கரவாத நாடாகவே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாகவே அந்நாடு இந்தியா மீது பயங்கரவாதத்தை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் உலக நாடுகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் பாகிஸ்தான் மேலும் மேலும் இந்தியாவிடம்தன் விளையாட்டைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒட்டுமொத்தமனித சமுதாயத்திற்கே சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை உலக நாடுகள் ஒற்றுமையுடன் எதிர்த்து அடக்கவேண்டும்.

அது தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று இந்தியாவுக்குத் தெரியும். ஆனால் அதை உடனடியாகச்செய்துவிட முடியாது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா எப்போதுமே தயாராகத் தான் உள்ளது. ஆனால் அதற்கு இந்தியமக்கள் அனைவரும் முதலில் மனரீதியாகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம். விரைவில்நிச்சயம் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம்.

கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தையும், சமீபத்தில் குஜராத்தில் உள்ள நாராயணசுவாமி கோவிலையும்தகர்க்க பயங்கரவாதிகள் எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் நம் படை வீரர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.அவர்களை உயிரோடு திரும்பக் கூட அனுமதிக்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு முன்புஎப்போதும் இல்லாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ சவால்களை வெற்றிகரமாக முறியடித்தும்காட்டியுள்ளோம் என்றார் வாஜ்பாய்.

ரஷ்யாவில் உள்ள ஒரு தியேட்டருக்குள் புகுந்து செசன்ய தீவிரவாதிகள் சுமார் 1,000 அப்பாவிகளை பணயக்கைதிகளாகப் பிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் வாஜ்பாய் கூறினார்.

"எனக்கும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் உறவு சரியில்லை என்று பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர்.ஆனால் இருவரும் சேர்ந்தே தான் இவ்வளவு நாட்களும் செயல்பட்டோம். இனியும் செயல்படுவோம். இதைஅனைவரும், குறிப்பாக பத்திரிக்கை நிருபர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றும் கூறினார் வாஜ்பாய்.

வாஜ்பாய், அத்வானி தவிர, தேசிய ஜனநாயக் கூட்டணியின் அமைப்பாளரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமானஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹரியான முதல்வர் சவுதாலா, காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப்முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+