"வீரப்பனிடமிருந்து 4வது கேசட் வரவில்லை"
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து 4வது கேசட் எதுவும் வரவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கேயும் டி.ஜி.பி. மடியாளும் கூறினர்.
கடந்த 6ம் தேதி வீரப்பனிடமிருந்து 3வது கேசட் வந்தது. அவனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவின் வீட்டு வாசலில் இந்தக் கேசட் வைக்கப்பட்டிருந்தது.
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும்கொள்ளேகால் பகுதி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமி ஆகியோரை தூதர்களாகஅனுப்ப வேண்டும் என்று அந்தக் கேசட்டில் வீரப்பன் கூறியிருந்தான்.
இந்நிலையில் வீரப்பனிடமிருந்து 4வது கேசட் வந்துள்ளதாக கொள்ளேகால் பகுதியில் செய்தி பரவியது.நாகப்பாவின் குடும்பத்தினரிடம் அந்தக் கேசட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு கேசட் வரவில்லை என்று கார்கே நிருபர்களிடம் கூறினார். நாகப்பாவின் குடும்பத்தினர்மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் இதுபற்றிக் கேட்டதாகவும் அப்படி ஒரு கேசட் வரவே இல்லை என்று அவர்கள்தெரிவித்ததாகவும் கார்கே தெரிவித்தார்.
வீரப்பனிடமிருந்து 4வது கேசட் வரவில்லை என்று டி.ஜி.பி. மடியாளும் நிருபர்களிடம் கூறினார். இது ஒரு வதந்திதான் என்றும் அவர் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications