காவிரியில் நீர் திறக்க கிருஷ்ணாவுக்கு சோனியா உத்தரவு
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் வயலார் ரவி டெல்லியில் கிருஷ்ணாவைச் சந்தித்து இதைத்தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்தும் வகையில் உடனடியாக காவிரியில் நீர் திறந்துவிட காங்கிரஸ் மேலிடம்உங்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்று கிருஷ்ணாவிடம் வயலார் ரவி கூறினார்.
இதையடுத்து சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசித்த கிருஷ்ணா, இன்று காலை தான் பெங்களூர் திரும்பினார்.
வந்த உடனேயே அவசர அவசரமாக இன்று காலை 11 மணிக்கு தன் அமைச்சரவையைக் கூட்டி காவிரி குறித்துவிவாதித்தார் கிருஷ்ணா.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.கூட்டத்திற்குப் பின்னர் வெளியே வந்து நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, இன்று இரவு மீண்டும் அமைச்சரவைகூடவுள்ளது என்று மட்டும் கூறினார்.
இந்நிலையில் இன்று பிற்பகலிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் கிருஷ்ணா அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் கர்நாடகத்தின் முக்கிய எதிர்க் கட்சிகளான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம்ஆகியவை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
ஆரம்பத்தில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக் கூடாது என்ற கர்நாடக அரசின்முடிவுக்கு நாங்கள் ஆதரவு தந்தோம். ஆனால் பாதயாத்திரை என்று ஒன்றை நடத்தி காவிரிப் பிரச்சனையைமுழுக்க முழுக்க அரசியலாக்கி விட்டார் கிருஷ்ணா என்று அக்கட்சிகள் கோபத்துடன் கூறியுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் காவிரி விவகாரம் தொடர்பாக நான்காவது முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகிருஷ்ணா கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுமாறு காங்கிரஸ் மேலிடமே உத்தரவிட்டுள்ளதால் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நீரைத் திறந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications