காவிரி: டெல்லியில் தமிழர்கள் பேரணி
டெல்லி:
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் உள்ள தமிழ்அமைப்புகள் போராட்டம் நடத்தின.
டெல்லி தமிழ்ச் சங்கம், தென் இந்திய கலாச்சார மற்றும் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினார்கள்.
டெல்லியின் முக்கியப் பகுதியான ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி நாடாளுமன்ற சாலைவரை நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் என்று சுமார் 300 பேர் "தண்ணீர் வேண்டும்,தண்ணீர் வேண்டும், தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும்" என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தென் இந்திய கலாச்சார மற்றும் பயிற்சி மையத்தின் தலைவருமான எம்.மலைச்சாமி தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
பேரணியின் முடிவில் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று ஒரு மனுவும் அளிக்கப்பட்டது. காவிரி நதி நீர்ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் பிரதமர் வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காததன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் கர்நாடகம்செயல்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் வாழும் தமிழர்களும், அவர்களுடைய அடிப்படை உரிமைகளும்பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சனையில் நாங்களும் தமிழகத்தின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்பதைத்தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்தப் பேரணியை நடத்தினோம் என்று பி.பி.சி. தமிழோசைக்கு அளித்தபேட்டியில் மலைச்சாமி தெரிவித்தார்.
-->
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications