பெங்களூர் ஐடி.காம்: நாளை தொடங்கி வைக்கிறார் கலாம்
பெங்களூர்:
ஆசியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியான பெங்களூர் ஐடி.காம் கண்காட்சியை ஜனாதிபதிடாக்டர் அப்துல் கலாம் நாளை தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக அரசும் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தக் கண்காட்சியைநடத்துகின்றன.
இந்தக் கண்காட்சியில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்கள்பங்கேற்கின்றன.
இந்த ஐந்து நாள் கண்காட்சியை உலகம் முழுவதிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளிக்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த இந்தக் கண்காட்சியை இந்தியா உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த 2.45 லட்சம் பேர்கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கண்காட்சியால் சுமார் 250 மில்லியன் டாலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இனாம்தார் கூறினார்.
இந்தியாவின் 11 மாநில அரசுகளும் இதில் பங்கேற்க உள்ளன.
இதற்கிடையே பெங்களூர் ஐடி.காம் கண்காட்சியைத் துவக்கி வைத்த பிறகு, பேலஸ் கிரவுண்டுக்குச் செல்லும்டாக்டர் கலாம் அங்கு 600 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் குறித்த வகுப்புகளை நடத்தவுள்ளார்.
அதன் பிறகு "சாதாரண மனிதனுக்கும் தகவல் தொழில்நுட்பம்" என்ற தலைப்பிலான ஒரு மாநாட்டிலும் கலந்துகொள்கிறார் டாக்டர் கலாம். மொரீஷியஸ், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும், ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
-->
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications