காவிரி டபுள் ஆக்ட்: காங்கிரஸ், பா.ஜ.க. கடும் போட்டி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை பா.ஜ.க. கண்டித்துள்ளது.

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறுகையில்,

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் மூலம் கர்நாடகத்தின் மரியாதை கெட்டுவிட்டது. கர்நாடக விவசாயிகளின்நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக நலனுக்காக சிறை செல்லவும் தயார் என்று கூறிய முதல்வர் கிருஷ்ணா இன்று நீரைத் திறந்துவிட்டுள்ளார். தனது பதவியைபாதுகாத்துக் கொள்வதற்காக கிருஷ்ணா இதைச் செய்துள்ளார் என்றார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. அதே போலபா.ஜ.கவும் தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் கர்நாடகத்தைக் கண்டிக்க மறுத்தது. காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு நதிகள் இணைப்புகுறித்து பதில் சொல்லி மழுப்பினார் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு.

ஓட்டுக்காக டபுள் ஆக்ட் அரசியல் நடத்துவதில் காங்கிரசுக்கு சற்றும் சளைத்தது அல்ல பா.ஜ.க. என்பது மீண்டும்நிரூபிக்கப்பட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+