சிவகாசியில் பட்டாசு விற்பனை படுமந்தம்

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் பட்டாசுத் தொழில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பட்டாசு விற்பனை"புஸ்வானம்" போல் ஆகியுள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

பட்டாசு என்றவுடன் சீறிப் பாயும் சிவகாசி பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும் தமிழகம் மட்டும் இல்லாது,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது சிவகாசி பட்டாசு.

ஆனால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை படு மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் கூறுகின்றனர்.இதற்குப் பல காரணங்களை அவர்கள் அடுக்குகிறார்கள்.

லைசன்ஸ் வழங்குவதிலும், பட்டாசு தொழிற்சாலையை நடத்துவதிலும் அரசு விதித்துள்ள கெடுபிடிகள்உற்பத்தியைக் குறைத்து விட்டதாக ஒரு புகார் வந்துள்ளது. அரசு கூறும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதால்செலவுகள் அதிகரித்து விட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதனால் பட்டாசுகளின் விலை குண்டக்க மண்டக்க உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் பட்டாசுகளில்காசைப் போட்டு வீணடிக்க விரும்பாமல் வீட்டில் உட்கார்ந்து டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துபொழுதைக் கழிக்க ஆரம்பித்துவிட்டனர் மக்கள்.

மேலும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை உலக அளவில் பெரிதாக்கி விட்டதாக தொண்டு நிறுவனங்கள் மீதுபட்டாசு உற்பத்தியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் தங்களது வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து விட்டதாகவும் அவர்கள்குமுறுகிறார்கள். தொண்டு அமைப்புகளுக்கு எதிராக மிகப் பெரிய கலவரமே வெடிக்கும் சூழ்நிலை சிவகாசியில்காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுதவிர காவிரிப் பிரச்சினை, குஜராத் கலவரம் ஆகியவையும் பிசினஸ் "டல்" ஆக நடப்பதற்கு முக்கியக்காரணங்கள்.

காவிரிப் பிரச்சினை காரணமாக மைசூர், பெங்களூர் பகுதிகளைச் சேர்ந்த பல வியாபாரிகள் இன்னும் சிவகாசிக்குவரவே இல்லை. அதேபோல பஞ்சத்தில் அடிபட்டுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டிணம் ஆகிய பகுதியைச் சேர்ந்தவியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லையாம்.

காவிரிப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளில் பலர் ஒரு வேளை சோற்றுக்குக் கூடவழியில்லாமல் நத்தை, நண்டு, எலி போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் எங்கே பட்டாசு வாங்கப் போகிறார்கள் என்பதால் காவிரி டெல்டா பகுதிகளிலிருந்துவழக்கமாக வரும் பட்டாசு வியாபாரிகள் இம்முறை சிவகாசி பக்கமே தலை காட்டவில்லை.

குஜராத் கலவரங்களிலிருந்தே அப்பகுதி மக்கள் இன்னும் மீளாததால், அங்கிருந்தும் வியாபாரிகள்வரவில்லையாம்.

இவற்றைத் தவிர தமிழகத்திலும் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வறட்சியும், பஞ்சமும் தலைதூக்கியுள்ளது. மக்களிடம் பணம் புழக்கமே இல்லை.

மேலும் தமிழக அரசுக்கும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விலை உயர்வு, கட்டண உயர்வு என்பதோடுநில்லாமல் அரசு ஊழியர்களின் பல சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருவதால் தீபாவளிகொண்டாடுவதிலோ, பட்டாசு வாங்குவதிலோ அவர்கள் அக்கறை கொண்டது போலத் தெரியவில்லை.

மொத்தத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகக் குறைவான அளவிலேயே விற்பனை இருப்பதாக பட்டாசுஉற்பத்தியாளர்கள் சோகத்துடன் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு விற்பனை மந்தமாகிக் கொண்டே போவதும் குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+