தீவிரமடைகிறது அரசு ஊழியர் போராட்டம்: தொழிற்சங்கங்களும் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அந்தப் போராட்டத்திற்கு பல்வேறுதொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவுள்ளன.

போனஸ், டி.ஏ. உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒருவாரமாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஓரளவு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுஅலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடப்பதால் ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் 63 சதவீத ஊழியர்கள் அலுவலகங்களில் வருகை தந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 4 சதவீத அகவிலைப்படிக்கு மேல் எதுவும் தர முடியாது என்று ஜெயலலிதா இன்று திட்டவட்டமாகஅறிவித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்ககூட்டமைப்பின் சார்பில் இன்று மாலை ஆலோசனை நடக்கிறது.

அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த பல நிர்வாகிகளை போலீஸார் கைது செய்வதற்காக தேடி வருவதால் இந்தக்கூட்டம் ரகசியமாக நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தர திமுக தொழிற்சங்கமானதொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. ஆகியவை முடிவு செய்துள்ளன.

இந்த சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டமும் இன்று மாலை நடக்கிறது. அப்போது ஆதரவு குறித்துமுடிவெடுக்கப்படும்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று பல இடங்களிலும்ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+