தேனி அருகே கட்டாய மதமாற்ற முயற்சி?
தேனி:
தேனி அருகே கிறிஸ்தவ அமைப்பினர் கட்டாய மதமாற்றம் செய்ய முயலுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தேனி அருகே உள்ளது கக்கன்ஜி காலனி. மதமாற்ற முயற்சி குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்ததாவது:
இந்தப் பகுதியில் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் இந்த காலனிப் பகுதியில் சிலகிறிஸ்தவ அமைப்பினர் வந்து சர்ச் கட்ட இடம் வாங்கினர்.
பின்னர் காலனி மக்களிடையே கிறிஸ்தவம் குறித்து பிரசாரம் செய்யத் தொடங்கினர். அதன் பிறகு கிறிஸ்தவத்திற்குமாறினால் நல்ல வாழ்க்கை கிடைக்கும், சாதிப் பிரச்சினை இருக்காது என்று கூறி எங்களை கிறிஸ்தவ மதத்திற்குமாற வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினர்.
இது எங்களுக்குப் பிடிக்காததால், சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து சர்ச் கட்டும் பணியை அவர்கள்நிறுத்தி விட்டனர். எங்களது கடும் எதிர்ப்பால் பிரசாரத்தையும் நிறுத்தி விட்டனர் என்று அப்பகுதி மக்கள்தெரிவித்தனர்.
கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் தொடர்பான சர்ச்சை பெரிதாகிக் கொண்டிருக்கும் வேளையில், தேனிமாவட்டத்தில் கட்டாய மதமாற்ற முயற்சி குறித்து செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
