திமுக பேரணியில் போலீஸ் தடியடி சரியே: கமிஷன் அறிக்கை
சென்னை:
சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடந்த திமுக பேரணியின் போது போலீஸார் நடந்துகொண்டது சரியானதே என்று நீதிபதி பக்தவச்சலம் தலைமையிலான விசாரணைக் கமிஷன் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட கமிஷன் அறிக்கை சட்டசபையில் உறுப்பினர்கள் பார்வைக்குவைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக பேரணியின் போது ஏற்பட்ட திடீர் வன்றையைத் தடுக்க போலீஸார் பலப் பிரயோகம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
பலவித எச்சரிக்கைகள் விடுத்த பிறகும்,வன்முறை ஓயும் சூழ்நிலை ஏற்படாத காரணத்தினால் தான் தடியடி,கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை போலீஸார் பயன்படுத்தியுள்ளனர்.
அவ்வாறு செய்திருக்காவிட்டால், டிஜிபி அலுவலகத்திற்கு சமூக விரோதிகள் தீ வைத்திருக்கக் கூடும். அதைக்காப்பாற்றும் நோக்கில் தான் குறைந்தபட்ச பலத்தை போலீஸ் பயன்படுத்தியிருக்கிறது.
போலீஸாரின் தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் இதுபோன்றநேரங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
அதற்காக பத்திரிக்கையாளர்களுக்கு வரைமுறை ஒதுக்குவதும் சரியாக இருக்காது. வேண்டுமானால்தொலைவிலிருந்தவாறே செய்திகளை சேகரிக்க ஏற்பாடு செய்யலாம்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியும், கும்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்குடும்பத்திற்கு ரூ.25,000 நிதியும் தர பரிந்துரைக்கப்படுகிறது என்று பக்தவச்சலம் கமிஷன் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications