மும்பை- ஹாங்காங் விமானத்தில் குண்டுப் புரளி
டெல்லி:
மும்பையில் இருந்து ஹாங்காங் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக தொலைபேசி மிரட்டல்வந்ததையடுத்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த மும்பை-டெல்லி-ஹாங்காங் விமானம் (எண்: 316) இன்று காலை 6.10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டது. அப்போதுஹாங்காங் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு ஒரு பேக்ஸ் செய்தி வந்தது.
மும்பையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பரம்ஜித் கெளர் என்ற பெண்ணும் பவன் என்ற குழந்தையும் வெடிகுண்டுகளுடன்ஏறியிருப்பதாகவும் அவர்களின் பெயர் விவரமும் தரப்பட்டிருந்தது. இந்த இருவரும் விமானத்தை நடுவானில் வெடிக்கச் செய்யதிட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை ஹாங்காங் அதிகாரிகள் உடனே ஏர் இந்தியா நிறுவனத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த விமானம் டெல்லியில்தரையிறங்கியவுடன் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
காலை 7.15 மணிக்கு அந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியுடன் அதில் இருந்த 178 பயணிகளும்இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டனர். ஆனால், பேக்ஸ் செய்தியில் வந்த பெயரில் எந்தப் பயணியும் குழந்தையும் இல்லை.
இருந்தாலும் அனைத்துப் பயணிகளும் முழுச் சோதனை செய்யப்பட்டனர். விமானத்தில் ஏற்றப்பட்ட அனைத்து சரக்குகளும் இறக்கப்பட்டுசோதனையிடப்பட்டன.
டெல்லி விமான நிலையம் முழுவதும் சோதனை நடந்தது. ஆனால், தீவிரவாதிகளோ அல்லது வெடிகுண்டுகளோ சிக்கவில்லை.
விமானமும் தனி இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு முழுச் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும்சிக்கவில்லை. இதனால் பேக்ஸ் மிரட்டல் வெறும் புரளி தான் என்பது உறுதியானது.
இதையடுத்து இந்த விமானத்தின் பயணத்தை தொடர அதிகாரிகள் உத்தரவிட்டனர். பிற்பகலில் இந்த விமானம் தனது ஹாங்காங்பயணத்தைத் தொடரும்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications