மேட்டூர் வந்தது காவிரி நீர்
சேலம்:
கர்நாடக அரசு திறந்து விட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது.
உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவையடுத்து கர்நாடக அரசு காவிரியிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட ஆரம்பித்தது.
கே.ஆர். சாகர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 26,800 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 49.2 அடியாக உள்ளது. கர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியுள்ளதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்று எதிபார்க்கப்படுகிறது.
தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழையும் பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம்மளமளவென்று உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
-->












Click it and Unblock the Notifications