தீபாவளிக்காக மாடுகளை விற்கும் தஞ்சை விவசாயிகள்
தஞ்சாவூர்:
தங்களிடம் உள்ள மாடுகளை விற்று தீபாவளியைக் கொண்டாடும் அவல நிலைக்கு தஞ்சாவூர் மாவட்டவிவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, யானை கட்டிப் போரடித்த சோழ நாடு" என்னும்பெருமைக்குரிய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடம் இப்போது போரடிக்க பயிர்கள் இல்லை.
போரடிக்கத் தேவைப்படும் மாடுகளும் விற்பனைக்குத் தயாராகிவிட்டன.
குறுவை சாகுபடி முழுமையாக அடிபட்டு விட்டதால் எலி, நத்தை, நண்டு ஆகியவற்றை சாப்பிடும் நிலைக்குஏற்கனவே காவிரி டெல்டா விவசாயிகள் தள்ளப்பட்டிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு மூடைநெல் கூட கொள்முதல் செய்யப்படவில்லை.
கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துவிட மறுத்ததைத் தொடர்ந்து குறுவை சாகுபடி முற்றிலும் பறிபோய்விட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். இதனால் தான் ஒரு மூடை நெல் கூட கொள்முதல்செய்யப்படவில்லை.
சாகுபடி இல்லாததால் நெல் பயிர்களிலிருந்து கிடைத்திருக்க வேண்டிய வைக்கோலும் விவசாயிகளுக்குக்கிடைக்காமல் போனது. இதனால் மாடுகளுக்கு விவசாயிகளால் வைக்கோலைக் கூட உணவாகக் கொடுக்கமுடியவில்லை.
இந்நிலையில் ஐப்பசி மாதம் பிறந்து இதோ தீபாவளியும் வந்து விட்டது. ஏற்கனவே வறுமையில் வாடித் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்றாவது தீபாவளியைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தஞ்சாவூர் மாட்டுச் சந்தையில் லட்சக்கணக்கான மாடுகள் விற்பனைக்காகக் குவிந்து வருகின்றன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கும் இந்த மாட்டுச் சந்தை தான் தமிழகத்திலேயே 2வது பெரிய மாட்டுச்சந்தையாகும்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் மாடுகள் இங்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்படும்.
கடந்த சில வாரங்கள் வரை ஒவ்வொரு வாரமும் சுமார் 50,000 மாடுகள் விற்பனைக்கு வரும் நிலை மாறி, தற்போதுஒரு லட்சம் மாடுகள் வரை விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.
திருமணமாகியுள்ள தங்கள் மகள்களுக்குத் தாய் வீட்டுத் தீபாவளி சீதனமாக மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டுமே?
அதற்காகத் தான் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் மாடுகளையே கண்ணீருடன் விற்று வருகின்றனர்.
கடுமையான வறுமையில் உழன்று கொண்டிருக்கும் இந்த விவசாயிகள் இனிமேல் இந்த மாடுகளைத் திரும்பவும்வாங்க முடியுமா என்பது வெறும் கேள்விக்குறி மட்டுமல்ல, சோகமான விஷயமும் கூட.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications