கடும் மழையால் சம்பா பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடியை விவசாயிகள் தீவிரமாகமேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்துநல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி டெல்டாவில் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளனர். கர்நாடகத்தின்கேவலமான அரசியலாலும் மழை இல்லாததாலும் குறுவைப் பயிரை இழந்த விவசாயிகள் மத்தியில் பெரும்நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்த மழையால் சம்பா சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். மழை தொடர்வதையடுத்து சம்பா சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாகஈடுபட்டுள்ளனர்.

ஜெவுக்கு விவசாயிகள் நன்றித் தந்தி:

இந் நிலையில் நாகை மாவட்டம் செம்பனார் கோவிலைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தந்திகள்அனுப்பியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை டெல்டா பகுதிகளுக்குப் பெற்றுத் தந்தமைக்காகவும், விவசாயிகளுக்குதீபாவளிப் பரிசுப் பை வழங்கியமக்ைகு நன்றி தெரிவித்தும் இந்த வாழ்த்துத் தந்திகள் அனுப்பப்பட்டன.

மழை நீடிக்கும்:

இதற்கிடையே, தமிழகத்தில் இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மழை மேலும் 2 நாளைக்கு நீடிக்கும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+