புலிகள் நிலையில் பெரும் மாற்றம்: 2வது சுற்று பேச்சு வெற்றி
நகோன் பதோம்:
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தன.
வட கிழக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் இடைக்கால நிர்வாகத்தைக் கேட்டு வந்த புலிகள் அந்தக் கோரிக்கையைகைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதற்குப் பதிலாக இந்தப் பகுதிகளில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிட அனுமதிக்கப் போவதாகவும்,தாங்களே முழுமையாக அரசியலில் ஈடுபடவும் உள்ளதாக புலிகள் கூறியுள்ளனர்.
தாயாலாந்தின் நகோன் பதோம் நகர ஓய்வு விடுதியில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடைந்தன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஆலோசனைகள்ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வட கிழக்குப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களர்கள் அனைவருக்கும்போதிய பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் தரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வட கிழக்குப் பகுதியில் அமைதியை உறுதி செய்யவும், இனக் கலவரத்துக்கு இடம் கொடுக்கும் அனைத்து விஷயங்களையும்அகற்றவும், மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் வட கிழக்குப் பகுதியில் குடியமர்த்தவும், இந்தப் பகுதியை புணரமைக்க நிதி திரட்டவும் இரு கூட்டுக்கமிட்டிகளை அமைக்கவும் அரசும், புலிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சின் முக்கிய அம்சமே அதிகாரப் பகிர்வு குறித்து இரு தரப்பினருக்கும் ஆலோசிக்க ஆரம்பித்திருப்பது தான்.
மேலும் முழு அளவில் அரசியல் பாதையில் ஈடுபடவும் புலிகள் தரப்பில் ஆர்வம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்நிருபர்களிடம் பேசிய புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம்,
எங்களது எதிர்காலத் திட்டமே முழு அளவில் அரசியல் பாதைக்குத் திரும்புவது தான். புலிகள் அமைப்பில் இனி சிறுவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள். ஏற்கனவே எமது இயக்கத்தில் இருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். வட கிழக்கில் இனிசிறுவர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்க மாட்டார்கள்.
எங்களுக்கு இடைக்கால நிர்வாகம் கூட வேண்டாம். அடிப்படைப் பிரச்சனைகள் தீர வேண்டும். அதைத் தான் முன்னிருத்தப் பேசஆரம்பித்துள்ளோம். அதே நேரம் தமிழர் பகுதிகளுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும்.
இடைக்கால நிர்வாகம் தான் பிரச்சனையைத் தீர்க்கும் என்று எதிர்காலத்தில் நாங்கள் கருதினால் அதை அப்போது முன் வைப்போம்.
இடைக்கால நிர்வாகம், அரசியல் பாதை ஆகிய விஷயங்களில் புலிகளின் நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த சுற்றுப்பேச்சுக்கள் இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று தெரிகிறது.
இதனால் இலங்கையில் நிரந்தர அமைதி திரும்புவதற்தான வாய்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications