கர்நாடகம் மீண்டும் முரண்டு: தமிழகததுக்கு நீர் விடுவதை நிறுத்தியது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகம் திடீரென நிறுத்திவிட்டது.

இரு முறை உச்ச நீதிமன்றத்தை அவமதித்த கர்நாடகம் நீதிபதிகளின் கடும் கண்டனத்தையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் விட ஆரம்பித்தது.

கடந்த 1ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் வரும் 6ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9,000 கன அடி நீரையும்,7ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் 6,000 கன அடி நீரையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி தமிழகத்துக்கு கர்நாடகம் 15ம் தேதி வரை 99,000 கன அடி நீரைத் தர வேண்டும்.

இந் நிலையில் கடந்த 4 நாட்களிலேயே மேட்டூருக்கு இந்த அளவு கன அடி நீர் வந்து சேர்ந்துவிட்டதாக கர்நாடகம் கூறுகிறது. இதையடுத்துதமிழகத்துக்கு நீர் விடுவதை நேற்று இரவு முதல் நிறுத்திக் கொண்டுவிட்டதாக கர்நாடகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தகவல்துறை அமைச்சர் காகோடு திம்மப்பா, தமிழகத்துக்கு நீர் விடுவது நேற்றேநிறுத்தப்பட்டுவிட்டது. பலத்த மழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்கும் மேட்டூர் அணைக்கட்டுக்கும் இடையே போதிய நீர்சென்றுவிட்டது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதைவிட அதிக நீர் மேட்டூருக்குப் போய்விட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்துநீரைத் திறந்து விட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் மேட்டூருக்கு 6ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 9,000 கன அடி நீர்செல்வதை உறுதி செய்வோம் என்றார்.

கர்நாடகத்தின் முறைகேடு:

பெரும் மழை காரணமாக மேட்டூருக்கு தமிழக நீர்ப் பிடிப்பு பகுதியில் இருந்து நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூருக்கு வந்த நீரைஎல்லாம் தான் திறந்துவிட்ட நீராக கர்நாடகம் கணக்கில் காட்ட முயல்வதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் மழை நீர் மேட்டூருக்குப் போய்ச் சேருவதை ஏதோ கர்நாடகம் தான் திறந்துவிட்ட கணக்கில் சேர்த்துள்ள. இதன் முலம்தமிழகத்தின் மழை நீரை கர்நாடகம் ஏதோ தான் பிச்சை போட்டது மாதிரி பேசுவது கடுமையாகக் கண்டித்தக்கது.

இவ்வளவு நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கூறிக் கொண்டிருக்கிறது கர்நாடகம்.இதன் மூலம் தான் திருந்தவே போவதில்லை என்பதை கர்நாடகம் காட்டிவிட்டது.

15ம் தேதி முதல்வர் கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுவரை தொடர்ந்து தமிழகத்துக்குத்தண்ணீரை விட வேண்டும் எனவும் இடையில் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் வேண்டுமானால் இந்தத் தீர்ப்பை மாற்றலாம்எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. அதுவரை தண்ணீரை விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதற்கிடையே கர்நாடகம் மீண்டும் தனது புத்தியைக் காட்டிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+