Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்ளூரில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு கோரி தமிழ் அமைப்புகள் 17ம் தேதி போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பவே விடமாட்டோம் என கன்னட வெறியரான வாட்டாள் நாகராஜ் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக தமிழ் டிவி சானல்கள் பெங்களூரிலும் கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இதை கர்நாடகஅரசு மற்றும் போலீசாரின் உதவியுடன் கன்னட ரெளடிகள் அமலாக்கியுள்ளனர்.

இந்தக் கும்பல் தியேட்டர்களில் தமிழ் படங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதனால் பெங்களூரில் உள்ள சுமார் 40 லட்சம் தமிழர்கள்உள்பட கிட்டத்தட்ட 75 கர்நாடகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை தாக்கி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழ் சேனல்கள் ஒளிபரப்புஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சில இடங்களில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பவும் ஆரம்பித்தனர். ஆனால், அந்தப் பகுதி கன்னட வெறியர்களும் ரெளடிகளும் சேர்ந்துஆபரேட்டர்களை மிரட்டி மீண்டும் ஒளிபரப்பை நிறுத்திவிட்டனர்.

இந்த ரெளடிகளுக்கு பெங்களூர் உள்பட பல இடங்களிலும் போலீசார் பெரும் உதவியாக இருந்து வருகின்றனர்.

பெங்களூர் ஸ்ரீராமாபுரம் பகுதியில் தமிழ் சேனல்களை ஒளிபரப்புமாறு கோரி போராட்டம் நடத்திய தமிழ்ப் பெண்களை கன்னடரவுடிகளுடன் சேர்ந்து போலீசார் தாக்கியுள்ளனர்.

இந் நிலையில் தமிழர்களின் அடிப்படை உரிமையை மீண்டும் பெறவும், தமிழ் சேனல்களுக்கு மீண்டும் அனுமதி கோரியும், தமிழ்திரைப்படங்களை திரையிட அனுமதிக்கக் கோரியும் தமிழ் அமைப்புகள் வரும் 10ம் தேதி மாபெரும் பேரணி நடத்தி கவனர்னிடம் மனுகொடுக்கத் திட்டமிட்டன.

ஆனால், போலீஸ் கமிஷ்னர் இதில் தலையிட்டு போராட்டத்தை 15ம் தேதிக்குப் பின்னர் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இதையடுத்து இந்தப் போராட்டம் வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் கிருஷ்ணா மீதுதமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது நினைவுகூறத்தக்கது.

இந்தக் கோரிக்கையை ஏற்றும் போராட்டத்தை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக இதை தலைமையேற்று நடத்தும் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

வாட்டாள் மீண்டும் திமிர்:

இந் நிலையில், கர்நாடகத்தில் இனிமேல் தமிழ் படங்கள், தமிழ் சேனல்களே இருக்காது என கன்னட வெறியரான வாட்டாள் நாகராஜ்கூறியுள்ளார்.

தமிழ் சேனல்களை ஒளிபரப்ப கோரி தமிழர்கள் பேரணி நடத்தும் அதே நாளில் நாங்களும் போட்டிக்கு பேரணி நடத்துவோம் என்று அவர்கூறினார்.

பின்னர் வாட்டாளும் மற்ற கன்னட வெறிக் கும்பல்களும் சேர்ந்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயைச் சந்தித்தனர்.

அப்போது இனி தமிழ் சேனல்களுக்கு இங்கு அனுமதியே தரக் கூடாது என்று கோரினர். இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசியவாட்டாள், எங்கள் கோரிக்கையை கார்கே ஏற்றுக் கொண்டுள்ளார். ஆங்காங்கே திருட்டுத்தனமாக ஒளிபரப்பாகி வரும் தமிழ் சேனல்களைத்தடுக்கவும் உத்தரவிடுவதாக கார்கே உறுதிமொழி தந்துள்ளார் என்றார் வாட்டாள்.

தமிழர்களும் சந்திப்பு:

இதற்கிடையே கார்கேயை பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர். தமிழ் சேனல் கோரி போராடிய தமிழ்பெண்களை போலீசார் தாக்கியது குறித்து அவரிடம் விளக்கினர்.

அப்போது அவர்களிடம் பேசிய கார்கே, தமிழ் சேனல்களை 15 நாட்களில் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரைதமிழர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ் பெண்களை போலீசார் தாக்கியது குறித்து விசாரித்துநடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

5 கோடி பேர் வசிக்கும் கர்நாடகத்தில் வெறும் 50 பேர் கூச்சல் போடுவதால் தமிழ் சேனல்களைத் தடுத்துவிட முடியாது என்று கூறியகார்கே, பேரணி நடத்தினால் போட்டிக்கு கன்னட அமைப்புகளும் பேரணி நடத்துவார்கள். எனவே, அவற்றை நடதத வேண்டாம்.

15 நாட்களில் மீண்டும் தமிழ் சேனல்கள் பெங்களூரில் ஒளிபரப்பாக நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

கார்கேயின் வீட்டில் நடந்த இந்தச் சந்திப்பின்போது செய்தித்துறை அமைச்சர் காகோடு திம்மப்பா, பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் சிங்ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கார்கே, தமிழ்ச் சேனல்களை ஒளிபரப்பக் கோரி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தமிழர் பேரணிக்கு அனுமதிதரப்படவில்லை என்றார்.

அமைச்சர் கார்கே இரு தரப்பினரையும் சந்தித்து இரு தரப்பினருக்கும் உறுதிமொழி தந்துள்ளதைப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+